லுயிஸ் சுவாரெஸ் ‘ஹாட்ரிக்’

மட்ரிட்: ஸ்பானிய லீக் ஆட்டம் ஒன்றில் எட்லெட்டிக் பில்பாவுக்கு எதிராக பார்சிலோனாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லுயிஸ் சுவாரெஸ் மூன்று கோல்கள் போட்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 6-0 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா கைப்பற்றியது. இடைவேளையின்போது காயம் காரணமாக அண்மையில் ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருது பெற்று லயனல் மெஸ்சி ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிற்பாதி ஆட்டத்தில் மெஸ்சி களமிறங்காதபோதிலும் சுவாரெஸ், நெய்மார் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பில்பாவ் திக்குமுக்காடியது. இந்த வெற்றி மூலம் லீக் பட்டியலில் ரியால் மட்ரிட் குழுவைவிட பார்சிலோனா கூடுதலாக இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. பார்சிலோனாவைவிட ஒரு புள்ளி அதிகம் கொண்டுள்ள எட்லெட்டிகோ மட்ரிட் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. அக்குழு லாஸ் பால்மாஸ் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. ரியால் மட்ரிட்டுக்கும் ஸ்போர்ட்டிங் கிஜோனுக்கும் இடையிலான ஆட்டத்தை 5-1 எனும் கோல் கணக்கில் ரியால் வென்றது. இந்த ஆட்டத்தில் ரியாலின் கெரத் பேல் காயம் அடைந்தார். கோல் மழை பொழிந்த பார்சிலோனா நட்சத்திர வீரர் லுயிஸ் சுவாரெஸ். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்