நடையைக் கட்டிய நடால்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே நட்சத்திர வீரர் ரஃபயெல் நடால் வெளி யேறியிருப்பது அதிர்ச்சி அலை களை ஏற்பட்டுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடால், சக நாட்டு வீரரான ஃபெர் னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார். அண்மைக் காலமாகத் தோல்விகளைக் சந்தித்து வரும் நடாலுக்கு இந்த ஆட்டமும் சவால்மிக்கதாக அமைந்தது. கடந்த ஆண்டு எந்தவொரு ‘கிராண்ட் ஸ்லாம்’ பட்டத்தையும் வெல்லாத நடால் இந்த ஆண்டிலாவது மீண்டும் பட்டங் களை வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் ஆஸ்திரேலியப் பொது விருதில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் முதல் சுற்றிலேயே அவர் கனவு கலைந்தது. முதல் செட்டில் நடாலுக்கு இணையாக வெர்டாஸ்கோ கடுமையாக விளையாடினார். இதனால் அந்த செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் நடால் தனது செட்டை 7-6 (8-6) என இழந்தார். ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4, 6-3 என எளிதில் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே சக நாட்டு வீரரான ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோவின் அதிரடி ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தோவ்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார் ரஃபயெல் நடால்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்