வெற்றியைத் தேடி களமிறங்கும் இந்தியா

கேன்பரா: இந்தியா–ஆஸ்திரே லியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேன்பராவில் இன்று நடைபெறுகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்து இருந் தது. இன்றைய ஆட்டத்திலாவது இந்தியா வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்திய ரசிகர்கள். முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய பந்தடிப்பாளர்கள் சிறப் பாகச் செயல்பட்டும் பலனில் லாமல் போனது. இந்திய அணி யின் பந்துவீச்சு திருப்திகரமாக அமையாததால் வெற்றி பெறுவது எட்டாக் கனியானது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற பந்துவீச்சில் மாற்றங்கள் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. அஸ்வின் மீண்டும் களம் இறக்கப்படலாம். பந்தடிப்பில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரகானே நன்கு விளையாடி வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்

23 Aug 2019

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

23 Aug 2019

ஆர்சனலுக்கான சவால்