ஆஸி. பொது விருது: செரீனா, ஷரபோவா வெற்றி

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான நடப்பு வெற்றியாளரும் உலகின் முதல்நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் தைவானைச் சேர்ந்த சுவீயை எதிர்கொண்டார். இதில் செரீனா 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். இந்தச் சுற்றில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்த டாரியா கசினாவை சந்திப்பார்.

மற்றோர் ஆட்டத்தில் 5ஆம் நிலை வீராங்கனையும் 2008ஆம் ஆண்டு வெற்றியாளருமான ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா) 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் பெலரூசைச் சேர்ந்த ஷானோவிச்சை எளிதில் வென்றார். ஷரபோவா மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் லாரன்டேவிசை எதிர் கொள்வார். 12வது நிலை வீராங்கனை பெலிண்டா (சுவிட்சர்லாந்து), 13வது நிலை வீராங்கனை ராபர்ட்டோ வின்சி (இத்தாலி) ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ரஷ்யாவை சேர்ந்த 23வது நிலை வீராங்கனை சுவெட்லனா குஸ்னெட் சோவா இரண்டாவது சுற்றில் அதிர்ச்சிகரமாகத் தோற்றார். உக்ரைனை சேர்ந்த பான்டரென் 6-1, 7-5 என்ற கணக்கில் குஸ்னெட்கோவை வீழ்த்தி னார். 7வது நிலை வீரர் நி‌ஷிகோரி (ஜப்பான்) இரண்டாவது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின் சிராஜிசெக்கை சந்தித்தார். இதில் நி‌ஷிகோரி 6-3, 7-6 (7-5), 6-3 என்ற கணக்கில் வென்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்