ஆஸி. ரசிகர்களின் நம்பிக்கையைச் சிதறடித்த மரே

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரில் நான்கு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியும் ஒருமுறையேனும் வெற்றி கை கூடாமல் ஏமாந்ததுபோல் இம்முறையும் நடந்து விடக்கூடாது என மிகுந்த கவனமாக விளையாடி வருகிறார் பிரிட்டனின் ஆன்டி மரே (படம்). டென்னிஸ் விளையாட்டில் அதிவேகமாக ‘சர்வீஸ்’ (163 மைல்) பெருமைக்குரிய ஆஸ்திரேலிய வீரர் சேமுவல் கிரோத், மரேயின் கனவைத் தவிடு பொடியாக்கும் எண்ணத்துடன் களமிறங்கினார். ஆனால், அவரது நினைப்பிலும் உள்ளூர் ரசிகர் களின் நம்பிக்கையிலும் மண்ணைப் போட்டார் மரே. 6-0, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்ற மரே மூன்றாம் சுற்றில் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் ஒன்றரை மணி நேரமே நீடித்தது.

முதல் சுற்றில் ரஃபாயல் நடாலை வீழ்த்தி அதிர்ச்சியளித்த ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ இரண்டாம் சுற்றில் இஸ்ரேல் வீரர் டூடி செலாவிடம் 4=6, 6=3, 6=3, 7=6 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் விக்டோரியா அஸரென்கா (பெலருஸ்), கர்பின்ய முகுருஸா (ஸ்பெயின்) ஆகியோர் மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இரட்டையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனைகள் சானியா மிர்சா=மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியின் சாதனைப் பயணம் தொடர்கிறது. முதல் சுற்றில் டெலியானா பெரேரா (பிரேசில்) =மரியானா டூக் (கொலம்பியா) ஜோடியை 6=2, 6=3 என்ற செட்களில் தோற்கடித்து இரண்டாம் சுற்றில் நுழைந்தது. சானியா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக வென்ற 31வது ஆட்டம் இது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’