கரேனாவுடன் யங் லயன்ஸ் குழு $4மி. ஒப்பந்தம்

எஸ் லீக்கில் போட்டியிடும் யங் லயன்ஸ் குழுவுடன் இணையம், கைபேசி நிறுவனமான கரேனா $4 மில்லியன் பெறுமானமுள்ள ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 21 வயதுக்குட்பட்டோருக் கான சிங்கப்பூர் தேசிய காற் பந்துக் குழுவைச் சேர்ந்த பெரும் பாலான ஆட்டக்காரர்கள் யங் லயன்ஸ் குழுவுக்கான எஸ் லீக் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் வாயிலாக யங் லயன்ஸ் குழுவுக்கு $2 மில்லியன் ரொக்கம் வழங்கப் படும்.

இன்னொரு 2 மில்லியன் வெள்ளி குழுவின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 14ஆம் தேதியன்று பாலஸ்டியர் கல்சா குழுவுக்கு எதிராக யங் லயன்ஸ் அணி புதிய பருவத்தைத் தொடங்கு கிறது.

Loading...
Load next