கோஹ்லி: இந்தியாவுக்குக் கூடுதல் டி20 அனுபவம்

மெல்பர்ன்: டி20 கிரிக்கெட் ஆட்டங்களைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணியைவிட இந்தியாவுக்குத்தான் அதிக அனுபவம் உள்ளது என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 381 ஓட்டங்களும் (2 சதங்கள், 2 அரைசதங்கள்), மூன்று டி20 போட்டிகளில் 199 ஓட்டங்களும் (3 அரைசதங்கள்) எடுத்தார். 27 வயதான விராத் கோஹ்லி ஒருநாள் போட்டியில் ஆக வேகமாக 7,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார். 171 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,212 ஓட்டங்களை கோஹ்லி குவித்துள்ளார். அவர் இதுவரை 25 சதங்களும் 36 அரைசதங்களும் அடித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணைய தளத்துக்கு கோஹ்லி பேட்டி அளித்தார். “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது கவலை அளித்தது. ஆனால் எங்களைவிட அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் ஒருநாள் தொடரை இழந்தாலும் மோசமாக விளையாடவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு