‘ரூனியின் வேட்டை தொடரும்’

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனியின் கோல் வேட்டை தொடரும் என அக்குழு நிர்வாகி லூயி வேன் ஹால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்டோக் சிட்டி குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் ஜெசே லிங்கார்ட், ஆன்டனி மார்ஷல், ரூனி ஆகியோர் கோல் அடிக்க, 3=0 என்ற கணக்கில் வென்றது மேன்யூ.

போட்டிக்குப் பின் செய்தியாளர் களிடம் பேசியபோது, “ரூனி கோல் அடித்ததில் மகிழ்ச்சி. இது அவருக்கும் நல்லது; குழுவிற்கும் நல்லது. ஏனெனில், அவர் கோல் போடும் ஆட்டங்களில் எல்லாம் குழுவும் வெற்றி பெறுகிறது,” என்றார் வேன் ஹால். லிவர்பூல் குழுவை 2-=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 50 புள்ளிகளுடன் பட்டியலில் தனது முதல் நிலையை வலுப்படுத்திக் கொண்டது லெஸ்டர் சிட்டி. இந்தப் பருவத்தில் புதிய காற் பந்துப் புயலாக உருவெடுத்து வரும் ஜேமி வார்டி, 60வது, 71வது நிமிடங்களில் லெஸ்டருக்காக இரு கோல்களைப் புகுத்தினார். இவற்றுடன் நடப்பு லீக்கில் அவரது கோல் எண்ணிக்கை 18 ஆனது.

ஸ்டோக் சிட்டிக்கு எதிராக கோலடித்த மகிழ்ச்சியில் மேன்யூ ஆட்டக்காரர் வெய்ன் ரூனி. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்