பட்லர் அதிரடி தொடர்கிறது

புளூம்ஃபோன்டைன்: தென்னாப் பிரிக்க கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 2=1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இங்கி லாந்து அணி, இப்போது ஒருநாள் தொடரையும் வெற்றி யுடன் தொடங்கியிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 39 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. முதலில் பந்தடித்த இங்கி லாந்து அணிக்கு நல்ல தொடக் கம் தந்தது ஜேஜே ராய்- அலெக்ஸ் ஹேல்ஸ் இணை. ராய் 30 பந்துகளில் 48 ஓட்டங்களையும் ஹேல்ஸ் 47 பந்துகளில் 57 ஓட்டங்களையும் விளாசினர்.

அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் ஜோ ரூட் தன் பங்காக 52 ஓட்டங்களை எடுத்தார். இருப்பினும், விக்கெட் காப் பாளர் ஜோஸ் பட்லரின் ஆட்டமே இங்கிலாந்து அணி இமாலய இலக்கை எட்ட உதவியாகப் பெரும் துணையாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் அதி வேக சதமடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனைக்குச் சொந் தக்காரரான பட்லர் இம்முறை 73 பந்துகளில் சதம் கடந்தார். ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு இது 4வது சதம். அதிரடி ஆட் டக்காரர் பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களைக் குவிக்க, இங்கி லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்களைச் சேர்த்தது.

76 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 105 ஓட்டங்களை விளாசிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்