வெற்றுப் பாதையில் வெலன்சியா

பார்சிலோனா: சுவாரெஸ் நான்கு கோல்களையும் மெஸ்ஸி மூன்று கோல்களையும் அடிக்க, ஸ்பானிய அரசர் கிண்ண அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 7-0 என வெலன்சியாவை விரட்டி விரட்டிப் பந்தாடியது பார்சிலோனா காற் பந்துக் குழு. சிங்கப்பூர் பெரும்பணக்காரர் பீட்டர் லிம்மிற்குச் சொந்தமான வெலன்சியா குழு தொடக்கத்தி லேயே கோலை விட்டுத் தந்தது. அக்குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஆண்ட்ரே கோமஸ் கவனக் குறைவாக இருந்த நேரத் தில் அவரிடமிருந்து பந்தைத் தட்டிப் பறித்து சுவாரெசுக்குக் கடத்தினார் நெய்மார். அதை மிக அழகாக வலைக்குள் தள்ளினார் சுவாரெஸ்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை பந்து சுவா ரெஸ் மூலமாக வலைக்குள் புகுந்தது. இம்முறை அவருக்குத் துணையாக இருந்தவர் விடால். மெஸ்ஸி, நெய்மார், சுவாரெஸ் என்ற தென்னமெரிக்கக் கூட்டணி யைக் கட்டுப்படுத்த முடியாமல் வெலன்சியா தவித்தது. எப்போதாவது ஒருமுறைதான் வெலன்சியா ஆட்டக்காரர்களால் பார்சிலோனா வலைப்பக்கம் செல்ல முடிந்தது. ஆனாலும் பலன் கிட்டவில்லை.

வெலன்சியா குழுவிற்கெதிரான ஸ்பானிய அரசர் கிண்ண ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோலடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா காற்பந்துக் குழுவின் மெஸ்ஸி (இடது), சுவாரெஸ். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்