கடந்த ஆண்டின் சிறந்த விளையாட்டாளர்

உடற்குறையுள்ள நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ, 23 (வலது), கடந்த ஆண்டின் சிறந்த சிங்கப்பூர் விளையாட்டாளருக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விருதைத் தட்டிச் சென்றார். தசை வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள யிப், சென்ற டிசம்பரில் நடந்த உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுப் போட்டிகளில் எஸ்2 50 மீட்டர் பின்நீச்சல் பிரிவில் உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். ஷைனா இங் (உருட்டுபந்து), சாந்தி பெரேரா (திடல்தடம்), கைருல் அன்வார் (உடற்குறையுள்ளோருக்கான காற்பந்து), ஜோசஃப் ஸ்கூலிங் (நீச்சல்) ஆகிய சக போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவிடம் இருந்து விருதைப் பெறும் யிப் பின் சியூ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்