சிறுவனுக்கு மெஸ்ஸியின் பரிசு

காபூல்: உள்நாட்டுப் போரால் தத்தளித்து வரும் ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த முர்ட்டாஸா அகமதி (படம்) எனும் ஐந்து வயதுச் சிறுவனின் ஏக்கம் தீர்ந்தது. பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் ரசிகனான இவனுக்கு மெஸ்ஸி பெயர் பொறித்த சீருடையை அணிய வேண்டும் என்பது பலநாள் ஆசை. வறுமை காரணமாக அதை வாங்கித் தரமுடியாத நிலையில் இருந்த அவனுடைய தந்தை, மெஸ்ஸியின் அர்ஜெண்டினா சீருடை போல வண்ணம் கொண்ட ஒரு பாலித்தீன் பையில் ‘10’ என மெஸ்ஸியின் எண்ணை எழுதி, அதைத் தம் மகனுக்கு மாட்டிவிட்டு காற்பந்து ஆடச் செய்தார். இந்தப் படம் இணையத்தில் வேகமாகப் பரவியது.

இது மெஸ்ஸியின் பார்வைக்குச் செல்ல, தமது கையெழுத்துடன் கூடிய தமது அர்ஜெண்டினா, பார்சிலோனா சீருடைகள் இரண்டையும் ஒரு பந்தையும் முர்ட்டாஸாவிற்குப் பரிசாக அனுப்பி வைத்தார். காபூலில் உள்ள தனது அலுவலகத்திற்கு முர்ட்டாஸாவை அழைத்து வந்து மெஸ்ஸியின் பரிசை அவனுக்கு வழங்கியது யுனிசெஃப் அமைப்பு. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அரை இறுதியில் வியட்னாம் வீராங்கனையோடு போராடிய மாதுரி, 20. படங்கள்: ஊடகம்

09 Dec 2019

மலேசியாவின் மாதுரி கராத்தே போட்டியில் தங்கம்

வெற்றியைக் கொண்டாடும் சிங்கப்பூர் குழு. படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

09 Dec 2019

பிலிப்பீன்சை அலறவிட்ட சிங்கப்பூர் குழு

சிவப்பு நிற சீருடையில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் டேனியல் ஜேம்ஸைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கும் சிட்டி யின் ஏஞ்சலினோ. இவரை டேனியல் ஜேம்ஸ் சர்வசாதாரண மாக பல முறை தாண்டிச் சென்றார். படம்: இபிஏ

09 Dec 2019

என்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி