புதிய ஃபிஃபா தலைவர்

ஸுரிக்: அனைத்துலகக் காற் பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சுவிட்சர்லாந்தின் கியானி இன்ஃபேன்டினோ, 45, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய காற்பந்துச் சங்கக் கூட்டமைப்பின் (யூஃபா) தலைமைச் செயலாளரான இவர் இரண்டாவது வாக்கெ டுப்பில் 115 வாக்குகளைப் பெற்றார். பஹ்ரைன் அரச குடும்பத் தைச் சேர்ந்தவரும் ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் தலைவருமான சல்மான் பின் இப்ராகிம் அல்-கலிஃபா இரண்டாவதாக வந்தார். முறைகேட்டில் ஈடுபட்டதால் ஆறு ஆண்டு இடைக்காலத் தடை பெற்ற செப் பிளாட்டரைத் தொடர்ந்து ஃபிஃபா தலைவ ராகப் பொறுப்பேற்கிறார் கியானி இன்ஃபேன்டினோ.

வாக்கெடுப்பு முடிவுகள் அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றியுரை ஆற்றிய இவர், “இந்தத் தருணத்தில் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலவில்லை. அனைவரும் இணைந்து பணியாற்றி ஃபிஃபா வின் கௌரவத்தை, மரியாதையை மீட்டெடுப்போம். ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க வகையில் பணியாற்றுவோம்,” என்று பேசி னார். படம்: ராய்ட்டர்ஸ்

 

காற்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் சுவிட்சர்லாந்தின் கியானி இன்ஃபேன்டினோ. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி