தாக்குதல் வலிமையைக் காட்டிய ரோவர்ஸ்

இந்தப் பருவ எஸ்-லீக் காற்பந்தில் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் தெம்பனிஸ் ரோவர்ஸ் நேற்று முன்தினம் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஜூரோங் வெஸ்ட் விளையாட்ட ரங்கில் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்ட ரசிகர்கள் திரண்டிருக்க, ஹவ்காங் யுனைடெட் குழுவை 4-1 என்ற கணக்கில் நசுக்கியது தெம்பனிஸ் குழு. முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே மூன்று முறை எதிரணியின் வலைக்குள் பந்தை உதைத்தது அக்குழு.

அந்தக் களிப்பில் அக்குழு சற்று மெத்தனமாக இருந்துவிட அதைச் சாதகமாக்கிக்கொண்டு 26வது நிமிடத்தில் கோலடித்தது ஹவ்காங் யுனைடெட் குழு. ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் இருந்தபோது தெம்பனிஸ் குழு வின் 4வது கோலைப் புகுத்தினார் ஃபஸ்ருல் நவாஸ். முதல் ஆட்டத்தில் கேலாங் குழுவுடன் 3-3 எனச் சமநிலை கண்ட தெம்பனிஸ் குழு, இப்போது நான்கு புள்ளிகளுடன் பட்டியலின் மூன்றாமிடத்தில் உள்ளது. அல்பி ரெக்ஸ் குழு ஆறு புள்ளிகளுடன் முதல்நிலையில் இருக்கிறது.

தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் 3வது கோலை அடித்த மகிழ்ச்சியில் முஸ்டாஃபிச் (இடது). படம்: எஸ்பிஎச்