லெஸ்டரிடம் தோற்ற நார்விச்

லெஸ்டர் சிட்டி: ஆட்டம் முடியும் தறுவாயில் 89ஆம் நிமிடத்தில் லெஸ்டர் சிட்டி அணியை கோல் போடவிட்டு நேற்று முன்தினம் தோல்வியைத் தழுவியது நார்விச் சிட்டி குழு. லெஸ்டர் சிட்டிக்கு மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய லியோனார்டோ உலோவா சக வீரரான மார்க் ஆல்பரைட்டன் கொடுத்த பந்தை கோலாக்கி லெஸ்டர் சிட்டி குழுவை மகிழ்ச்சி யில் ஆழ்த்தினார். ஆனால், அதுவரை லெஸ்டரின் விளையாட்டைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்தக் குழு தோற்றுவிடுமோ என்று எண்ணக் கூடிய அளவுக்கு முனைப்புடன் விளையாடியது நார்விச் சிட்டி குழு. அந்தக் குழுவின் வீரர்களான மேரன் ஜெரோம், நேதன் ரெட் மண்ட் இருவரும் தங்களுக்குக் கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்தனர்.

லெஸ்டருக்கு நேற்று முன்தினம் கோல் போட்ட உலோவா கள மிறங்குமுன் லெஸ்டர் நார்விச் தற்காப்பு அரணைத் தகர்க்க முடி யாமல் தவித்தது. அவர்களின் நட்சத்திர ஆட்டக் காரர்களான ஜேமி வார்டியும் ரியாட் மஹ்ரேசும் நீண்ட தூரத்தி லிருந்தே பந்தை உதைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நார்விச் குழுவுக்கு எதிராக கோல் போட்ட மகிழ்ச்சியில் லியேனார்டோ உலோவா. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

அரை சதம் அடித்த சிங்கப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேந்திரன் சந்திரமோகன். படம்: ஐசிசி

19 Oct 2019

2019 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று: சிங்கப்பூர் பேரெழுச்சி