இளம் வீரர் ரேஷ்ஃபர்ட் அதிரடி; யுனைடெட் வெற்றி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் ஆட்டம் ஒன்றில் ஆர்சனல் குழுவை 3=2 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனை டெட் வீழ்த்தியுள்ளது. யுனைடெட் குழுவின் பதின்ம வயது நட்சத்திரமான மார்கஸ் ரேஷ்ஃபர்ட் இரண்டு கோல்களைப் போட்டு ஆர்சனலைத் திக்குமுக்காட வைத்தார். இந்தத் தோல்வியால் லீக் பட்டத்தை வெல்ல ஆர்சனல் கொண்டிருக்கும் வேட்கைக்கு பேரிடி விழுந்துள்ளது. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ரேஷ்ஃபர்ட் அனுப்பிய பந்து ஆர்சலன் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைப் பதம் பார்த்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து ஆர்சனல் மீள்வதற்குள் அடுத்த மூன்று நிமிடங்களில் ரேஷ்ஃபர்ட் தமது இரண்டாவது கோலைப் போட்டார்.

ஜெசி லிங்கார்ட் அனுப்பிய பந்தை ரேஷ்ஃபர்ட் தலையால் முட்ட, அதைத் தடுக்க முடியாமல் ஆர்சனலின் தற்காப்பு அரண் திண்டாடியது. இருப்பினும், விட்டுக்கொடுக்காமல் விளை யாடிய ஆர்சனல் இடைவேளைக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தபோது டெனி வெல்பெக் மூலம் கோல் அடித்தது. ஆனால் ஆட்டத்தைச் சமப் படுத்த ஆர்சனல் கொண்டிருந்த ஆசை நிறைவேற யுனைடெட் அனுமதிக்கவில்லை. ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ஆண்டர் ஹெரேரா யுனைடெட்டின் மூன் றாவது கோலை போட்டார். அடுத்த நான்கு நிமிடங் களிலேயே ஆர்சனலின் மெசுட் ஒசில் இரு குழுக்களிடையே இருந்த கோல் இடைவெளியைக் குறைத்தார்.

ஆர்சனல் ஆட்டக்காரர் வேண்டுமென்றே கீழே விழுந்தார் என்று குறைகூறி உதவி நடுவரிடம் கீழே விழுந்து காட்டும் வேன் ஹால். படங்கள்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறந்த குழுக்களோடு போட்டியிடுவது சிட்டிக்குக் கடினமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்,” என்று அக்குழுவின் நிர்வாகி கார்டியோலா. படம்: ஏஎப்பி

10 Dec 2019

கார்டியோலா: சிட்டியால் போட்டி போட முடியாது
பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

10 Dec 2019

பில்லியர்ட்ஸ்: தொடர்ந்து 6வது முறையாக தங்கப்பதக்கம்

லெஸ்டர் சிட்டி குழுவிற்கான நான்காவது கோலைப் போட்டார் அதன் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி. படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

எதிர்பார்ப்பை அதிகரித்த லெஸ்டர் சிட்டி