3 பெனால்டிகளைத் தடுத்த கபல்லேரோ

லண்டன்: லீக் கிண்ண இறுதி சுற்றின் முடிவு பெனால்டிகள் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து லீவர்பூல் ஆட்டக்காரர்களின் மூன்று பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தி கிண்ணத்தை மட்டும் இல்லாது ஆட்டத்தின் நாயகன் பட்டத்தை வென்றார் மான்செஸ்டர் சிட்டியின் கோல்காப்பாளர் வில்லி கவபல்லேரோ. கூடுதல் நேரம் நிறைவடைந்த போது ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ‌ஷுட்அவுட்டில் வெளுத்துக் கட்டிய சிட்டி 3-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

முதல் பாதி ஆட்டத்தில் எவ்வளவு முயன்றும் இரு குழுக்களாலும் கோல் போட முடியாமல் போனது. இடைவேளை யின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமிநிலையில் இருந்தது. பிற்பாதி தொடங்கி சில நிமிடங்களில் சிட்டியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். அக்குழுவின் ஃபெணான்டினோ அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது. கிண்ணத்தை சிட்டி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டபோது ஆட்டம் முடிய ஏறத்தாழ ஏழு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தபோது லிவர்பூலின் ஃபிலிப் கோடின்யோவின் கோல் முயற்சி இலக்கை அடைந்தது. கூடுதல் நேரத்தில் நிகழ்ந்த கடுமையான போராட்டம் கை கொடுக்காமல் போக, பெனால்டி ‌ஷுட்அவுட் நடத்தப்பட்டது. 

லிவர்பூலின் லூகஸ் லேவா, கோடின்யோ, மாற்று ஆட்டக்காரர் ஆடம் லலானா ஆகி யோரின் பெனால்டி களை முறியடித்த கபல் லேரோ சிட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந் தார். பிற்பாதி ஆட்டத்தில் சிட்டிக்கு கோல் போட்ட ஃ பெ ர் ணா ன் டி னோ பெனால்டி எடுத்தபோது அது நிச்சயம் கோலா கும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிக களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவர் அனுப்பிய பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளி யானது. இருப்பினும், யாயா டோரே எடுத்த பெனால்டி கோலாகி சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது. “இந்தக் கிண்ணத்தை வென் றிருப்பது எனக்கும் சிட்டி ரசிகர்களுக்கும் சொல்லால் அடங்கா மகிழ்ச்சியை அளிக்கி றது.

லிவர்பூல் ஆட்டக்காரர்களின் பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தி அக்குழுவின் லீக் கிண்ண கனவைக் கலைத்த சிட்டி கோல்காப்பாளர் வில்லி கபல்லேரோ மூன்று பெனால்டிகளை முறியடித்த கபல்லேரோ சிட்டி கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை