மோர்கன்: பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்

புது­டெல்லி: நியூ­சி­லாந்தை வீழ்த்­திய இங்­கி­லாந்­தின் அணித் தலைவர் இயன் மோர்கன் இறுதிப் போட்­டி­யி­லும் நாங்கள் ஆதிக்­கம் செலுத்­து­வோம் என்று கூறி­யுள்­ளார். இந்த வெற்றி குறித்து பேசிய மோர்கன், "முதல் 7 ஓவர்­களில் நியூ­சி­லாந்து அணி ஆட்டம் மிகவும் அபா­ர­மாக இருந்தது. இதனால் அந்த அணி 180 ஒட்­டத்­திற்கு மேல் குவித்துவிடும் என்று கரு­தி­னேன்.

"ஆனால் எங்க­ளது பந்துவீச்­சா­ளர்­கள் மிகவும் சிறப்­பாக செயல்­பட்டு நியூ­சி­லாந்தை 153 ஒட்­டத்­திற்­குள் கட்­டுப்­படுத்­தினார் கள். "தொடர்ந்து விக்­கெட்­டு­களைக் கைப்­பற்றி அந்த அணியை முன்­னே­ற­வி­ட­வில்லை. குறிப்­பாக, வில்­லி­யம்­ச­னின் விக்கெட் மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கும். "நாங்கள் ஆக்­ரோ­ஷ­மான கிரிக்­கெட்டை வெளிப்­படுத்தி இருக்­கி­றோம். இறுதிப் போட்­டி­யில் விளை­யா­டு­வதே அனை­வ­ரின் கன­வா­கும்," என்றார் அவர். 'சூப்பர் 10' சுற்­று­களில் ஒரு தோல்­வியைக்­கூட சந்­திக்­காத நியூ­சி­லாந்து அணி அரையிறு­தி­யில் மண்ணைக் கவ்­வி­யது. இத்­தோல்வி பற்றி பேசிய, அணித் தலைவர் வில்­லி­யம்­சன், "சிறந்த அணி­யி­டமே நாங்கள் தோற்று இருக்­கி­றோம். இங்­கி­லாந்து அணியே அனைத்­துப் பாராட்­டு­த­லுக்­கு­ரி­ய­தா­கும்.

நியூசிலாந்து வீரர்கள் வீசிய பந்துகளை விளாசித் தள்ளி 44 பந்துகளில் 78 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் (சிவப்பு சட்டை) ஆட்ட நாயகன் விருது பெற்றார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!