‘செல்லாப் பந்துகளால் வெல்லாது போனோம்’

மும்பை: சொந்த மண்ணில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி வெற்றியாளராக வாகை சூடியது. தொடரை ஏற்று நடத்திய நாடு கிண்ணத்தை வென்றது இதுவே முதன்முறை. அதே போன்றதொரு சாத னையை டி20 உலகக் கிண்ணத் திலும் நிகழ்த்தும் ஆவலுடன் இருந்த இந்திய அணிக்குக் களமும் காலமும் கைகொடுத்தது. ஆனாலும், எதிர்பாராத சில தவறு களால் அத்தகையதொரு பொன் னான வாய்ப்பை அந்த அணி கோட்டைவிட்டது. கிரிக்கெட்டின் புதிய அவதார மாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களை விளாச, நேற்று முன் தினம் இரவு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங் களைக் குவித்தது இந்திய அணி.

இமாலய இலக்கு என்பதாலும் இரண்டாவது ஓவரிலேயே அதிரடி மன்னன் கெய்லை வெளியேற்றிய தாலும் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி என நம்பப்பட்டது. ஆனால், ஜான்சன் சார்ல்ஸ் (52), லெண்டில் சிம்மன்ஸ் (82*), ஆண்ட்ரே ரசல் (43*) ஆகியோரது அதிரடி ஆட்டத்தால், இரண்டு பந்துகள் மீதமிருக்க ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பெற்ற சிம்மன்சுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. இருமுறை பிடிகொடுத்தபோதும் 'நோ பால்' என்பதால் அவர் தப்பினார். அஸ்வினும் பாண்டியா வும் அந்தப் பந்துகளை வீசினர். மற்றொரு முறை சிம்மன்ஸ் அடித்த பந்தை எல்லைக் கோட்டருகே பிடித் தார் ஜடேஜா. ஆனாலும், நிதா னிக்க முடியாமல் அவர் எல்லைக் கோட்டை லேசாக மிதித்துவிட்ட தால் மூன்றாவது முறையாக சிம்மன்ஸ் தப்பினார். அந்த இரு 'செல்லாப் பந்து களும்' அந்த இரவில் பெய்த பனியும்தான் இந்திய அணியின் வெற்றியைப் பறித்துவிட்டதாகச் சொன்னார் அவ்வணித் தலைவர் மகேந்திர சிங் டோனி.

"இரண்டு செல்லாப் பந்துகள் தான் எனக்கு வருத்தம் தருகின் றன. இது பந்தடிப்பாளருக்கு ஊக் கம் தருவதாக அமைந்தது. அளவுக் கதிகமாக பனி பெய்ததால் பந்தை இறுக்கமாகப் பிடித்து வீசவும் சிரம மாக இருந்தது," என்றார் அவர். கோல்கத்தாவில் நாளை இரவு நடக்கும் இறுதிப் போட்டியில் 2வது முறையாகக் கிண்ணம் வெல்லும் கனவுடன் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீசும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த உற்சாகத்தில் வழக்கம்போல திடலுக்குள் புகுந்து ஆட்டம் போட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியினர். பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டலுக்குள் நுழைந்தபோதும் பாட்டு, நடனம் என அவர்களிடம் உற்சாகமும் மகிழ்ச்சியும் கரைபுரண்டோடியது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!