தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆக்டிவ் எஸ்ஜி பயிற்சியகம்

தொடக்கப் பள்ளி மாணவர்களுக் கான புதிய ஆக்டிவ் எஸ்ஜி பயிற்சியகம் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, பயிற்சியகத்தின் முதல்வரான அலெக்சாண்டர் டூரிச் ஆகியோ ரால் ஜூரோங் ஈஸ்ட் விளையாட் டரங்கத்தில் நேற்றுக் காலை திறக்கப்பட்டது. விளையாட்டுத் துறைக்கான தேசிய இயக்கமான ஆக்டிவ் எஸ்ஜியின் ஆதரவோடு இந்தப் பயிற்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 26ஆம் தேதி வரை பள்ளி விடுமுறையின்போது நடத்தப்படும் திட்டங்களில் பங்கெடுக்க விரும்பு வோரைப் பதிவு செய்ய பயிற்சியகம் தொடங்கிவிட்டது. ஜூரோங் ஈஸ்ட், பிடோக், குவீன்ஸ்டவுன், சிராங்கூன், உட்லண்ட்ஸ் ஆகிய விளையாட் டரங்கங்களில் 500 மாணவர் களுக்குப் பயிற்சி அளிக்க திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

ஒவ்வொரு விளையாட்டரங் கத்திலும் பயிற்றுவிப்பாளர் குழு ஒன்று இருக்கும். பள்ளி விடுமுறைகளில் வாரத்துக்கு மூன்று முறை ஒன்றரை மணி நேரத்துக்குப் பயிற்சி நடத்தப்படும். பள்ளி நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட் களில் மட்டும் பயிற்சி நடத்தப் படும். சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தின் பயிற்சித் திட்டம் மூலம் மாணவர்களுக்குக் காற்பந்துத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சித் திட்டம் சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மிச்சல் சேப்லோனால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது. ஆறு வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடையே காற்பந்துத் திறனை மேம்படுத்த புதிய பயிற்சியகம் இலக்கு கொண்டுள்ளது. நேற்று 350 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இளம் காற்பந்தாட்டக்காரர்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்). அவருடன் ஆக்டிவ் எஸ்ஜி பயிற்சியகத்தின் முதல்வர் அலெக்சாண்டர் டூரிச் (இடது). படம்: ஸ்போர்ட் எஸ்ஜி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!