வாய்ப்பைத் தவறவிட்டது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்

லண்டன்: இங்­கிலிஷ் பிரி­மியர் லீக் காற்­பந்தாட்­டத் தொடரின் லீக் பட்­டி­ய­லில் இரண்டா­வது நிலையில் இருக்­கும் டோட்டன்ஹம், லிவர்­பூல் குழு ­வு­டனான நேற்றைய ஆட்­டத்தை சமனில் முடித்­தது. அதனால், பட்­டி­ய­லில் முதல் நிலையில் இருக்­கும் லெஸ்டர் குழு­வுக்கு நெருக்­க­டியை அதி­க­ரிக்­கும் வாய்ப்பைத் தவறவிட்டது டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்பர். ஸ்பர்ஸ் குழுவின் கோல் காப்­பா­ளர் ஹூகோ லோரிஸ், லிவர்­பூல் வீரர்­கள் போட முயன்ற 4 கோல்­களைச் சிறப்­பாக தடுத்து ஆடி­ய ­தால் ஆட்டம் வெற்றி தோல்­வி­யின்றி சம­நிலை­யில் முடிந்தது. ஆனால், பிற்பாதி ஆட்­டத்­தில், கிடைத்த கோல் போடும் வாய்ப்பை ஸ்பர்ஸ் தவ­ற­விட்­ட­தால் வெற்றி பறிபோனது. எரிக் டயர் கடத்­திய பந்தை சன் ஹியூங்­மின் கோல் கம்பத்துக்கு அப்பால் அடித்­த­தால் ஸ்பர்­ஸ் கோல் போடும் வாய்ப்பை நழு­வ­விட்­டது.

மேலும் ஸ்பர்ஸ் குழுவின் எரிக்­சன், டெம்பலே அடித்த பந்தை கோலாக விடாமல் தடுத்து விளை­யா­டினார் லிவர்­பூல் குழுவின் கோல்காப்­பா­ளர். கோல் எதுவும் போடாமல் முடிந்தது முதல் பாதி ஆட்டம். ஆனால், பிற்பாதி ஆட்டம் தொடங்­கி­ய­வு­டன் முதல் கோலை போட்டார் லிவர்­பூல் குழுவின் கோட்­டின்யோ. 51வது நிமி­டத்­தில் அவர் அடித்த கோலை 63வது நிமி­டத்­தில் சமன் செய்தார் ஸ்பர்ஸ் குழுவின் கேன். அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சம­நிலை­யில் முடிந்தது. ஆட்டம் குறித்து பேசிய லிவர்­பூல் நிர்வாகி, யர்கன் க்ளோப், "டோட்­டன்­ஹம் குழு பட்­டத்தை வெல்­லு­வதற்­காகப் போரா­டு­கிறது. நாங்கள் மூன்று புள்­ளி­கள் பெறுவதற்­காகப் போரா­டு­கி­றோம்," என்றார் அவர். இத்­தொ­ட­ரின் மற்றோர் ஆட்­டத்­தில், போர்ன்மத் குழுவை 4-0 என்ற கோல்­க­ணக்­கில் வென்றது மான்­செஸ்டர் சிட்டி.

லிவர்பூல் குழுவின் பிலிப்பே கோட்டின்யோவும் டோட்டன்ஹம் ஸ்பர்சின் ஹேரி கேனும். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!