பதவி விலகினார் ஷாகித் அஃப்ரிடி

கராச்சி: பாகிஸ்தான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அப்ஃரிடி தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணித்தலைவராக உள்ளார் அவர். நடப்பு டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. முக்கியமாக அப்ரிடியின் தலைமை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதை பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். பாகிஸ்தான் அணியை வழி நடத்தியது எனக்குக் கிடைத்த கௌரவம். இந்த வாய்ப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் அதன் தலைவர் ஷாகாரியர் கானுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காகவும் உலகம் முழுவதும் நடைபெறும் மற்ற டி20 தொடர்களிலும் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!