‘வெற்றி பெறுவோம் என யாரும் நம்பவில்லை’

கோல்கத்தா: பல தடைகளைத் தாண்டி வெற்றியை எட்டியதாகக் கூறினார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணித்தலைவர் டேரன் சமி. டி20 உலகக் கிண்ணம் வென்றதைப் பற்றி பேசிய சமி, "நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாருமே நம்பவில்லை. எங்கள் கிரிக்கெட் வாரியம் எங்களை அவமதித்தது. சீருடை பெறுவதற்குக்கூட நாங்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. "இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் எங்களை மூளை இல்லாதவர் என்று கூறினார். "எங்கள் அணியில் அனை வரும் வெற்றியாளர்தான்," என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

மேலும், நிக்கோலஸ் தங்களைத் தரக்குறைவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியதையடுத்து தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றும் அவ்வாறு மனம் புண்படும்படி பேசியருந்தால் அதற்கு தான் வருந்துவதாகவும் நிக்கோலஸ் தெரிவித்தார். மேலும் ஒரே ஆண்டில் இளையர், பெண்கள் டி20, ஆண்கள் டி20 என மூன்று உலகக் கிண்ணத்தையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்தச் சாதனையானது வெஸ்ட் இண்டிசில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு உத்வேகம் பெற உதவும் என்று டேரன் சமி தெரிவித்துள்ளார். ஆண்கள் டி2-0 இறுதிப் போட்டியின் முடிவையே மாற்றியது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராட்வெத்தின் பந்தடிப்பு.

இரண்டாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் வெற்றி நடனமாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!