ரவி சாஸ்திரியை நீட்டிக்க வேண்டும்: அக்ரம்

கோல்­கத்தா: பாகிஸ்­தான் கிரிக்­கெட் அணி­யின் முன்னாள் கேப்­டன் வாசிம் அக்­ரம் பத்­தி­ரிகை ஒன்­றில் எழு­தி­யுள்ள கட்­டுரை­யில் இந்­திய அணி­யின் இயக்­கு­ந­ராக ரவி ­சாஸ்­தி­ரியை நீட்­டிக்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளார். 20 ஓவர் உல­கக் கிண்ணக் கிரிக்­கெட் போட்­டி­யில் இந்­திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த எந்த அணி­யாலும் இறு­திப்­போட்­டிக்கு வர இய­ல­வில்லை. சொந்த மண்­ணில் கிண் ணத்தை வெல்­வ­தற்கு இந்திய அணிக்கு அதி­க வாய்ப்பு இருப்­ப­தாக கணிக்­கப்­பட்ட நிலை­யில், தோல்­வியைத் தழு­வி­யது இந்திய அணி. இது இந்­திய அணிக்கு மிகப்­பெ­ரிய பின்­னடை­வா­கும்.

"இந்­திய அணி­யின் இயக்­கு­நர் ரவி­ சாஸ்­தி­ரி­யின் ஒப்­பந்த காலம் முடி­வுக்கு வந்துவிட்­ட­தா­க­வும், புதிய பயிற்­சி­யா­ளரைக் கொண்டு வரு­வ­தில் சம்பந்தப்­பட்ட நிர்­வா­கிகள் ஆலோ­சித்து வரு­வ­தா­க­வும் கேள்­விப்­பட்­டேன். ரவி சாஸ்­திரி விருப்­பப்­பட்­டால், அவரை அந்தப் பத­வி­யில் தொட­ரச் செய்ய வேண்­டும் என்று கரு­து­கி­றேன். இதற்கு முன்பு இந்­திய அணிக்கு வெளி­நாட்டைச் சேர்ந்த­வர்­கள் பயிற்சி அளித்­தி­ருக்­கிறார்­கள். "அவர்­களுக்கு உள்­நாட்டைச் சேர்ந்த தாங்கள் சளைத்­த­வர்­கள் அல்ல என்­பதை ரவி­ சாஸ்­திரி மற்­றும் அவ­ரது குழு­வி­னர் நிரூ­பித்து இருக்­கிறார்­கள். "டங்கன் பிளட்­செர் (ஸிம்பாப்வே நாட்­ட­வர்) பயிற்­சி­யின்கீழ் இந்­திய அணி தொடர்ந்து 8 டெஸ்­டு­களில் தோல்வி அடைந்தது.

"ரவி சாஸ்­திரி பொறுப்­பேற்­ற­தும் அணி­யின் நம்­பிக்கையை மேம்பட செய்து, ஊக்­கப்­படுத்­தினார். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடந்த 20 ஓவர் கிரிக்­கெட் தொட­ரில் இந்­திய அணி ஆஸ்­தி­ரே­லி­யாவை முழுமை­யாக தோற்­க­டித்து 'ஒயிட்­வாஷ்' செய்து அசத்­தி­யது. "எல்­லா­வற்­றுக்­கும் மேலாக இவ­ரது பயிற்­சி­யின்கீழ் இந்­திய அணி மீண்­டும் போராட்­ட குணம் நிறைந்த அணி­யாக மாறி­யதை பார்க்க முடி­கிறது. இப்­போது எதி­ரணி வீரர்­களை நேருக்கு நேர் எதிர்­கொள்­வ­தில் அஞ்­சு­வ­தில்லை. ரவி ­சாஸ்­திரி வெறும் ஊக்கம் அளிப்­ப­வர் மட்­டும் அல்ல. கிரிக்­கெட் நுணுக்­கங்களை­யும் நன்கு அறிந்த அனு­ப­வ­சாலி." "இந்­திய கிரிக்­கெட் வாரி­யம் என்ன நினைக்­கிறது என்­பது எனக்­குத் தெரி­யாது. ஆனால் இந்தப் பொறுப்­பில் இருந்து அவர் நீக்­கப்­பட்­டால் ஆச்­ச­ரி­ய­மடை­வேன்," என்று அக்­ரம் எழு­தி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!