அட்லெட்டிக்கோவின் தந்திரம் எடுபடவில்லை

நூ காம்ப்: ஒரு கோல் போட்டு பின்னர் தற்காப்பில் கவனம் செலுத்தி பார்சிலோனாவை எதிர் கொள்வது, அதற்கடுத்து இரண்- டாவது சுற்று ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் பார்சிலோனாவை மூச்சு முட்ட தாக்கி வெற்றி பெறுவது என்ற அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் திட்டம் எடுபடவில்லை. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை பார்சிலோனாவுக்கும் அட்லெட்டிக்கோ மட்ரிட்டுக்கும் இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டி ஒன்றில் முன் னாள் லிவர்பூல், செல்சி வீரரான ஃபெர்னாண்டோ டோரெஸ் தமது ஆரம்பகால விளையாட்டுத் திறனை மீண்டும் ரசிகர்கள் கண் முன் கொண்டு வரும் விதத்தில் ஆட்டத்தின் 25ஆம் நிமிடத்தில் சக வீரரான கோக்கே கொடுத்த பந்தை பார்சிலோனாவின் கோல் வலைக்குள் செலுத்தினார்.

இதையடுத்து ஆட்டத்தில் தற்காப்பை மட்டுமே நம்பி பார்சிலோனாவை தடுமாற வைக்க லாம் என்று அட்லெட்டிக்கோ அணி களமிறங்கியது. ஆனால், எந்த டோரெஸ் மூலம் ஒரு கோல் கிடைத்ததோ அதே டோரெஸ் பின்னர் ஆட்டத்தின் 35ஆம் நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டை காண் பிக் கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். டோரெசின் வெளியேற்றம் பற்றிக் குறிப்பிட்ட அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் நிர்வாகி சிமியோனே, "என்ன நினைக்கிறேன் என்று என்னால் சொல்ல இயலாது, ஆனால் நிச்சயமாக நான் டோரெஸ் மீது கோபப்படவில்லை," என்று தனது கோபத்தை வெளிப் படுத்தினார்.

பார்சிலோனா அணியும் அட்லெட்டிக்கோ மட்ரிட் அணியும் நேற்று முன்தினம் பார்சிலோனாவில் மோதின. அந்த ஆட்டத்தின் இரண்டாவது கோலைப்போடுகிறார் சுவாரெஸ். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!