வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம்: டோனி புகழாரம்

மும்பை: புனே அணி மும்பை இந்தியன்சை வீழ்த்தியதற்கு சிறப்பாகப் பந்து வீசியதே காரணம் என்று டோனி கூறியுள்ளார். "முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று இருந்தாலும் எங்களது தொடக்கம் மிகவும் நல்லதாக அமைந்து உள்ளது என்று நான் நினைக்கவில்லை. வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம். பாராட்டு எல்லாம் அவர்களைத் தான் சாரும். குறிப்பாக ரஜத் பாட்டியா பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. கடைசிக் கட்ட ஓவர்களில் முன்னேற்றம் தேவை. ரகானே பேட்டிங் அபாரமாக இருந்தது," என்று டோனி கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, "மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம். ஆடுகளத்தைக் குறை சொல்ல முடியாது. எங்களது பேட்டிங்தான் சரியில்லை," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!