விட்டுக்கொடுக்காமல் விளையாடிய மேன்சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசையிலுள்ள முதல் நான்கு குழுக்களே சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் விளை யாடலாம் என்பதால் அதற்கான போட்டி விறுவிறுப்பாகியுள்ளது. இதில் நேற்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டிக்கும் வெஸ்ட் பிரோம்விச் குழுவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் லீக் பட்டிய லில் நான்காம் நிலையிலுள்ள மான்செஸ்டர் சிட்டி குழு, வெஸ்ட் பிரோம்விச் குழுவை 2=1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்ற தன் மூலம் தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் விளையாடி யுள்ளது.

நேற்றைய ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே மான் செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி யளித்தார் வெஸ்ட் பிரோம்விச் குழுவின் செசெக்னோன். ஜேம்ஸ் மெக்ளின் கொடுத்த பந்தை செசெக்னோன் அற்புதமாக கோலாக்கினார். பின்னர் அவரே மான்செஸ்டர் சிட்டியின் அலெக்சாண்டர் கோலோராவை வெஸ்ட் பிரோம்விச் கோல் எல்லைக்குள் தள்ளிவிட்டு மான்செஸ்டர் சிட்டிக்கான பெனால்டி வாய்ப்புக்கு வழிவகுத் தார். அப்படிக் கிடைத்த வாய்ப்பை செர்ஜியோ அக்குவேரோ கோலாக்கி ஆட்டத்தை சமப்படுத் தினார். இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிய 25 நிமிடங்கள் இருந்த நிலையில் சிட்டி குழுவின் சமிர் நஸ்ரி இரண்டாவது கோலை போட்டு சிட்டி குழுவுக்கு வெற்றி யைப் பெற்றுத் தந்தார்.

வெஸ்ட் பிரோம்விச் குழுவுக்கு எதிராக இரண்டாவது கோல் போட்ட மகிழ்ச்சியில் மான்செஸ்டர் சிட்டியின் சமிர் நஸ்ரி. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!