கிரிக்கெட்டில் மகுடம் சூடிய ஏசிஎஸ் பள்ளி

தேசிய அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் 'பி' பிரிவு போட்டியில் ஆங்கிலோ சீனப் பள்ளி (தன்னாட்சி) வாகை சூடி கிண்ணத்தைக் கைப் பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் அது விக்டோரியா பள்ளியை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற் கடித்தது. உயர்நிலை 3, 4 மாணவர்கள் கலந்து கொள்ளும் இப்பிரிவுக்கான இறுதி ஆட்டம் கடந்த 4ஆம் தேதி சிங்கப்பூர் இந்தியர் சங்க திடலில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டி யைக் காண ஏறத்தாழ 200 ஆதரவாளர் கள் திரண்டனர். சிங்கப்பூர்ப் பள்ளிகள் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 'பி' பிரிவு கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 6 பள்ளிகள் இவ்வாண்டு பங்கேற்றன. டி20 உலகக் கிண்ண ஆட்ட முறையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் போட்டியில் மொத்தம் 20 ஓவர்கள். ஒவ்வோர் ஓவரிலும் 6 பந்துகள்.

நடப்பு வெற்றியாளரான ஆங்கிலோ சீனப் பள்ளி (ஏசிஎஸ்) முதலில் பந்தடித்தது. பதற்றமான முறையில் துவங்கிய ஏசிஎஸ் வெகு விரை விலேயே அதன் அணித் தலைவரையும் துணை அணித் தலைவரையும் இழந்தது. இருப்பினும், ஆட்டம் இழக் காமல் 55 ஓட்டங்கள் குவித்த டிப்போன் பாசு வெற்றிக்கு வித்திட்டார். தங்களது அணியினரை ஆதரிக்க இரு பள்ளிகளும் ஆதரவாளர்களை அனுப்பி வைத்திருந்தது. விக்டோரியா பள்ளியின் ஆதரவாளர்கள் இசைக் கருவிகளின் மூலமாகத் தாளங்களை எழுப்பி தங்கள் குழுவை ஆதரித்தனர். பதிலுக்கு எதிர் அணியின் ஆதரவாளர் கள் ஒருமித்த குரலில் உற்சாக முழக்கங்களை முழங்கி தங்களது குழுவினருக்கு ஊக்கமளித்தனர். - நித்திஷ் செந்தூர்

விக்டோரியா பள்ளியின் பந்தடிப்பாளர் தேவான்‌ஷு பிஷ்ட்டின் (வலது) விக்கெட் சாய்ந்ததை அடுத்து கொண்டாட்டத்தில் இறங்கும் ஆங்கிலோ சீனப் பள்ளியின் பந்துவீச்சாளரும் துணை அணித் தலைவருமான சித்தாந்த் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!