யுனைடெட்டைப் புரட்டி எடுத்த ஸ்பர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்துக்கான போட்டி சூடுபிடித்திருக்கும் இவ்வேளை யில், பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழு மான்செஸ்டர் யுனைடெட்டை 3=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தக் காற்பந்து ஆட்டத்தில் இரு குழுக்களும் வெற்றிக்குக் குறி வைத்து களமிறங்கின. வெற்றி பெற்றால்தான் லீக்கில் முன்னிலை வகித்துக் கொண் டிருக்கும் லெஸ்டரை நெருங்க முடியும் என்கிற கட்டாயத்துடன் ஆட்டத்தைத் தொடங்கியது ஸ்பர்ஸ்.

அதே போல சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற வெற்றி அவசியம் என்ற நிலை யுனைடெட் அணிக்கு. ஆட்டம் தொடங்கியதும் கோல் போடுவதில் யுனைடெட் அவசரம் காட்டியது. 18 வயது இளம் வீரர் திமத்தி ஃபோசு=மென்சா, ஜவான் மாட்டாவுடன் இணைந்து கோல் களைத் தேடும் பணியில் மும்முர மாக ஈடுபட்டனர். ஆனால் ஸ்பர்சின் தற்காப்பு அரணை அவர்களால் தகர்க்க முடியாமல் போனது. யுனைடெட்டுக்கு சோதனை மேல் சோதனை என்பதற்கு ஏற்றாற்போல விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த திமத்தி காயம் காரணமாக வெளியேற நேரிட்டது. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கோல் போடும் அருமையான வாய்ப்பு ஸ்பர்சுக்குக் கிட்டியது.

யுனைடெட்டின் பெனால்டி எல்லைக்குள் கிறிஸ்டியன் எரிக்சன் அனுப்பிய பந்தைத் தலையால் முட்ட எரிக் லமேலா முயன்றார். கோல் வலைக்கு அருகில் இருந்த லமேலா அந்தப் பந்தைத் தலையால் முட்டியிருந்தால் அது வலைக்குள் புகுந்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பந்து அவரைக் கடந்து செல்ல, வாய்ப்பு நழுவி யது. முற்பாதி ஆட்டத்தில் கோல் போட முடியாமல் இரு அணிகளும் தவித்தன. இடைவேளையின்போது கோல் ஏதுமின்றி ஆட்டம் சமநிலையில் இருந்தது. இந்நிலையில், யுனைடெட்டின் நிர்வாகி வேன் ஹால் தமது குழு வில் செய்த மாற்றம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

ஸ்பர்ஸ் குழுவின் டோபி எல்டர்வேரெல்ட் (வலமிருந்து நான்காவது) தலையால் முட்டி பந்தை வலைக்குள் சேர்க்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!