பஞ்சாப் அணியை வென்றது குஜராத்

மொகாலி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் லயன்ஸ், முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் முரளி விஜய் 34 பந்துகளில் 42 ஓட்டங்களும், வோரா 23 பந்துகளில் 38 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் அணியின் ஓட்ட ரேட்டும் சரிந்தது. மேக்ஸ்வெல் 2 ஓட்டங்களிலும், கேப்டன் மில்லர் 15 ஓட்டங்களிலும் ஆட்ட மிழந்தனர். சகா 20 ஓட்டங்களும் ஸ்டாய்னிஸ் 33 ஓட்டங்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் சேர்த்தது. குஜராத் தரப்பில் பிராவோ 4 விக்கெட்டுகளும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கி விளையாடியது. ஆரோன் பின்ச், மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங் கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெக்கல்லம் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பின்ச்சுடன், கேப்டன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளை யாடிய ரெய்னா 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி ஆட்டமிழந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!