பார்சிலோனா வெளியேறியது

மட்ரிட்: பதினொரு ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்பெயினின் பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியுள்ளது. காற்பந்து உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து வைத்திருந்த பார்சிலோனா அணி, நேற்று அதிகாலை அட்லெட்டிக்கோ மட்ரிட்டுடனான இரண்டாம் சுற்று காலிறுதி ஆட்டத்தில் 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வி யைத் தழுவியது.

முதல் சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்ற நிலையில் இரண் டாம் சுற்றைத் தாண்டி அரையிறு திக்கு பார்சா அணி தகுதி பெறுவது சுலபம் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில் அது மட்ரிட் குழுவிடம் தோல்வி கண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத் துள்ளது. அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் இரண்டு கோல்களையும் கிரிசமான் போட வசதியாக நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனாவின் தற்காப்பு ஆட்டம் மிக மோசமாக இருந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் பிரஞ்சு வீரரான கிரிசமான் அடித்த பந்து வலைக்குள் போவதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் பார்சிலோனாவின் கோல்காப்பாளர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!