‘எஃப்ஏ கிண்ணம் என்னைவிட மேன்யூவிற்கே முக்கியம்'

வெஸ்ட்ஹேம்: நேற்று அதிகாலை நடைபெற்ற எஃப்ஏ கிண்ண காலிறுதி ஆட்டத்தில் வெஸ்ட்ஹேம் குழுவை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி வேன் ஹால், "எஃப்ஏ கிண்ணம் என்னைவிட மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் அதன் ரசிகர்களுக்கும்தான் முக்கியம்," என்று கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தின் 54ஆம் நிமிடத்தில் யுனைடெட்டின் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் சக வீரரான ஆண்டனி மார்சியல் கொடுத்த பந்தை கோல் வலையின் கோடியில் வெஸ்ட்ஹேம் கோல்காப்பாளரின் கைகளுக்கு எட்டாத வண்ணம் செலுத்தினார். பின்னர், ஆட்டத்தின் 67ஆம் நிமிடத்தில் மார்சியல் கொடுத்த பந்தை யுனைடெட்டின் பெல்ஜிய வீரரான மருவான் ஃபெலேய்னி கோல் வலைக்குள் புகுத்தி இரண்டாவது கோலை பெற்றுத் தந்தார்.

யுனைடெட்டின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் அடித்த பந்து கோல் வலையின் கோடியில் புகுந்தது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!