டெல்லிக்கு முதல் வெற்றி

புதுடெல்லி: இப்பருவத்துக்கான ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்து உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை அது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பூவா தலையாவில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பந்தடிப்பைத் தொடங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதுமட்டுமல்லாது, அக்குழு ஒட்டம் சேர்க்கவும் சிரமப்பட்டது. இதனால், நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 3 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதையடுத்து, 112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்தடிக்கத் தொடங்கியது. டெல்லி அணியில் டி காக், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். 3 ஓட்டங் களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, டி காக்குடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். இருப்பினும் ஒட்டங்களை மெதுவாகத்தான் சேர்க்க முடிந்தது. டி காக் கொடுத்த அற்புதமான கேட்சை முரளி விஜய் தவறவிட்டார். அப்போது டி காக் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். 7.6 ஓவர்களில் டெல்லி அணி 50 ஓட்டங்கள் எடுத்தது.

சீரான இடைவெளியில் ஓட்டங்கள் எடுத்து வந்த சாம்சன் 32 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந் தார். சிறப்பாக விளையாடிய டி காக் 38 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இதனையடுத்து, டெல்லி அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. டி காக் 59 ஓட்டங்களும் நேகி 8 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தனது முதல் போட்டியில் டெல்லி அணி கோல்கத்தாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்தடிப்பாளர் ஷான் மார்‌ஷின் (வலது) விக்கெட்டைச் சாய்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் டெல்லி அணியின் விக்கெட்காப்பாளர் டி காக் (இடது), டுமினி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!