ஸ்டோக் சிட்டியை பந்தாடிய ஸ்பர்ஸ்

ஸ்டோக் சிட்டி: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை ஸ்டோக் சிட்டியும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் மோதின. இதில் அபாரமாக விளையாடிய ஸ்பர்ஸ் குழு ஸ்டோக் சிட்டியை பந்தாடி 4=0 என்ற கோல் எண்ணிக்கையில் அந்தக் குழுவை ஓரங்கட்டியது. ஆட்டம் தொடங்கிய 9ஆம் நிமிடத்திலேயே ஸ்பர்சின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் ஹேரி கேன் அடித்த பந்து வளைந்து சென்று வலைக்குள் விழுந்து முதல் கோலை பெற்றுத் தந்தது ஸ்பர்ஸ் குழுவுக்கு. பின்னர் ஆட்டத்தின் 67ஆம் நிமிடத்தில் ஸ்பர்சின் மத்திய திடல் வீரரான டேலி அலி இரண்டாவது கோலை போட்டார். இதைத் தொடர்ந்து 71ஆம் நிமிடத்திலும் 82ஆம் நிமிடத்திலும் கேனும், அலியும் மாறி மாறி போட்ட இரண்டு கோல்கள் ஆட்டத்தை முடித்து வைத்தன.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பர்ஸ் குழு பிரிமியர் லீக் தர வரிசையில் லெஸ்டர் சிட்டி குழுவைவிட ஐந்து புள்ளிகள் குறைவாகப் பெற்று 68 புள்ளி களுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. ஸ்பர்சின் ஒரே வீரரான ஹேரி கேன் இதுவரை ஒரு குழுவாக தரவரிசைப் பட்டியலில் கடைசி நிலையில் இருக்கும் ஆஸ்டன் வில்லா குழுவைவிட அதிக கோல்கள் போட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டி கோல்காப்பாளரை தவிப்பில்விட்டு ஸ்பர்சின் இரண்டாவது கோலை போடும் டேலி அலி (இடது நீல சீருடையில்). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!