இறுதிச் சுற்றில் பயர்ன் மியூனிக்

மியூனிக்: ஜெர்மன் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு பயர்ன் மியூனிக் குழு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் வெர்டர் பிரேமன் குழுவுக்கு எதிராக பயர்ன் மியூனிக் களமிறங்கியது. இந்த ஆட்டத்தை 2=0 எனும் கோல் கணக்கில் பயர்ன் கைப்பற்றியது. இரண்டு கோல்களையும் பயர்ன் குழுவின் நட்சத்திர வீரர் தாமஸ் மியூலர் போட்டார். ஆட்டம் தொடங்கி அரை மணி நேரத்தில் பயர்னின் முதல் கோல் புகுந்தது. பெனால்டி எல்லைக்குள் கோல் பசியுடன் இருந்த மியூலரை பிரேமன் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த தவறினர். எனவே, இதற்கான தண்டனையை பிரேமன் அனுபவிக்க நேரிட்டது. மியூலர் தலையால் முட்டிய பந்து கோலானது. முதல்பாதி ஆட்டத்தில் பிரேமன் அதற்குக் கிடைத்த இரண்டு பொன்னான வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது.

இடைவேளையின்போது பயர்ன் 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பயர்ன் மியூனிக் குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பயர்னின் விடால் பெனால்டி எல்லைக்குள் கீழே விழுந்தார். அவரை பிரேமன் ஆட்டக்காரர்கள் எவரும் விழச் செய்யவில்லை என்றும் அவராகவே வேண்டுமென்றே விழுந்தார் என்றும் தோன்றியது. ஆனால் நடுவர் பயர்ன் மியூனிக் குழுவுக்கு பெனால்டி வாய்ப்பை அளித்தார். பெனால்டியை எடுத்த மியூலர் கோல் போட்டு வெற்றியை உறுதி செய்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!