பஞ்சாப்பை வீழ்த்திய கோல்கத்தா அணி

மொகாலி: கவுதம் காம்பீர் தலைமையிலான கோல்கத்தா அணி பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. பூவா தலையாவில் வென்ற கோல்கத்தாவின் அணித் தலைவர் காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வோரா 8 ஓட்டங்களில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் நிதானமாக ஆடி 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் மில்லர் (6), மேக்ஸ்வெல் (4), சஹா (8) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர். ஷான் மார்ஷ் மட்டும் நிலைத்து நின்று ஆடி ஓட்டங்களைக் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 56 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கோல்கத்தா தரப்பில் மோர்கல், நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தனர். 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் கோல்கத்தா அணி களமிறங்கியது. கடந்த ஆட்டங்களைப் போலவே உத்தப்பாவும் காம்பீரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!