கோல் விருந்து படைத்த பார்சா

மட்ரிட்: நான்கு ஆட்டங்களாக பார்சிலோனாவின் பக்கம் வீசாத வெற்றிக் காற்று நேற்று அதிகாலை டிபோர்ட்டிவா லா கொருனா குழுவிற்கு எதிரான ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் புயலென வீசியது. இந்தப் பருவ ஸ்பானிய லா லீகா பட்டத்தை பார்சிலோனா எளிதில் தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நான்கு ஆட்டங் களாக வெற்றியை அறியாது அக்குழு தடுமாறத் தொடங்கியது. இதனால் அடுத்த இரு நிலைகளில் இருந்த அட்லெட்டிகோ மட்ரிட், ரியால் மட்ரிட் குழுக்கள் பார்சாவிற்கு மிகவும் நெருக்க மாக வந்துவிட்டன.

பார்சாவும் அட்லெட்டிகோவும் ஒரே புள்ளிகளைப் பெற்றிருக்க, அவற்றைவிட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருக் கிறது ரியால். கோல் வித்தியாசத்தில் முதல் நிலை யில் இருந்தாலும் மீதமுள்ள ஐந்து ஆட் டங்களிலும் பார்சா வெற்றி பெற்றால் தான் கிண்ணக் கனவு சாத்தியமாகும் எனும் நிலை. இந்த இக்கட்டான நிலையில், பட்டியலின் 14ஆம் நிலையில் இருக்கும் டிபோர்ட்டிவா குழுவை எதிர்கொண்டது பார்சா.

டிபோர்ட்டிவா குழுவிற்கெதிரான போட்டியில் நான்கு கோல்களைப் போட்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் பார்சிலோனா வீரர் சுவாரெஸ். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!