மேன்யூ, லிவர்பூல் அபாரம்

ஓல்ட் டிராஃப்ர்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் கிரிஸ்டல் பேலஸ் குழுவை வெற்றி கொண்டது. யுனைடெட்டின் முதல் கோல் ஆட்டத்தின் 4ஆம் நிமிடத்தில் வந்தது. மேன்யூவின் தற்காப்பு ஆட்டக்காரர் மட்டேயோ டார்மியன் அனுப்பிய பந்தை பேலசின் தற் காப்பு வீரர் வெளியே உதைப்ப தற்குப் பதிலாக தமது அணியின் கோல் வலைக்குள் செலுத்தினார்.

பின்னர், இரண்டாம் பாதியில் தம்மிடம் வந்த பந்தை இடது காலால் அற்புதமாக உதைத்து பேலஸ் கோல் வலைக்குள் தள்ளி தமது அணிக்கு 2வது கோலை பெற்றுத் தந்தார் டார்மியன். எனினும், கிரிஸ்டல் பேலசின் கோல்காப்பாளரான ஜுலியன் ஸ்பெரோனி பலமுறை கோல் வலையை நோக்கி வந்த பந்தை தடுத்திராவிட்டால் பேலசின் கதி இன்னும் மோசமாகியிருக்கும். பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள மேன்யூ இந்த ஆட்டத்தில் வெல்ல வேண் டியது அவசியம் என்ற நிலையில் அவர்கள் அதைச் சாதித்துவிட்ட தாகவே கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!