சீற மறந்த குஜராத் சிங்கங்கள்

ராஜ்கோட்: புதிய அணி என்ற போதும் தான் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் பெயருக் கேற்றாற்போல் தாங்கள் சிங்கங் கள்தான் என நிரூபித்த குஜராத் லயன்ஸ் அணி நான்காவது ஆட்டத்தில் கிழடு தட்டிய சிங்கம்போல் காட்சியளித்தது. மாறாக, தான் ஆடிய முதல் இரு போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்போது ஒளிப்பிழம்பாக உருவெடுத்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொட ரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பத்து விக்கெட் வித்தி யாசத்தில் மகத்தான வெற்றியை ருசித்தது ஹைதராபாத் அணி. நாணய சுழற்சியில் தோற்ற போதும் சொந்த அரங்கில் ரசிகர் களின் பேராதரவுடன் பந்தடிக்கத் தொடங்கிய குஜராத் அணிக்கு எதிர்பார்த்ததுபோல் தொடக்கம் அமையவில்லை. அந்த அணி ஆடிய முதல் மூன்று போட்டி களிலும் ஆட்ட நாயகனாக மிளிர்ந்த ஆரோன் ஃபின்ச் இம் முறை ஓட்டமேதும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் 'ஸ்டம்ப்'பைப் பறிகொடுத்து ஏமாற்றினார்.

ஒன்பதாவது ஐபிஎல் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த 15வது லீக் போட்டியில் பங்ளாதேஷ் இளம் வேகப்பந்து வீச்சாளரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரருமான முஸ்தஃபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்து 14 ஓட்டங்களில் நடையைக் கட்டிய குஜராத் லயன்ஸ் அணியின் 'புது மாப்பிள்ளை' ரவீந்திர ஜடேஜா. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!