அலெக்சிஸ் தந்த முன்னேற்றம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் முதல் நான்கு இடங்களுக்குள் வரவேண்டும் என்ற ஆர்சனல் குழுவின் முயற் சிக்கு அலெக்சிஸ் சான்செஸ் ஏற்றம் தந்துள்ளார். ஆர்சனல்-=வெஸ்ட் பிரோம்விச் ஆல்பியன் குழுக்கள் இடையே நேற்று அதிகாலை லண்டன் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் இரண்டு கோல் களைப் போட்டு ஆர்சனல் குழுவை கரையேற்றினார் சான்செஸ். அதுவும் முதல் கோலை 6வது நிமிடத்திலேயே அவர் போட்டது ஆர்சனலை அமைதிப்படுத்தியது.

பின்னர், ஆட்டத்தின் 36ஆம் நிமிடத்தில் கிடைத்த 'ஃப்ரீகிக்' வாய்ப்பைப் பயன்படுத்தி 2வது கோலையும் போட்டு அவர் வெற்றியை உறுதி செய்ததால் தர வரிசைப் பட்டியலில் மூன்றாவது நிலைக்கு ஆர்சனல் முன்னேறியது. இவ்வாண்டு ஜனவரி முதல் தேதியன்று ஆர்சனல் முதல் நிலையில் இருந்ததை வைத்துப் பார்க்கும்போது அதன் தற்போதைய நிலை ஆர்சனலின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும் என்று பிபிசி தகவல் கூறுகிறது.

ஆர்சனல் குழுவின் முதல் கோலைப் போட்ட மகிழ்ச்சியில் அலெக்சிஸ் சான்செஸ் (இடது), அவரை வாழ்த்த விரையும் ஹெக்டர் பெல்லரின். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!