அரையிறுதியில் நடால்

பார்சிலோனா: பார்சிலோனா பொது விருது டென்னிஸ் போட்டிக்கான அரை இறுதிக்கு சொந்த மண்ணில் களமிறங் கிய ரஃபயேல் நடால் தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத் தில் அவர் இத்தாலி யின் ஃபேபியோ ஃபோக்னினியை 6-2, 7-6 (7-1) எனும் நேர் செட்டில் வீழ்த்தினார். இவ்விரண்டு வீரர்களுக்கும் இடை யிலான கடந்த ஐந்து ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை ஃபோக்னினி கைப் பற்றியது குறிப்பிடத் தக்கது. முதல் செட்டில் எளிதாக வெற்றி பெற்ற நடாலுக்கு இரண்டாவது செட்டில் ஃபோக் னினி நெருக்குதல் தந்தார்.

இரண்டாவது செட்டில் நடால் 2-0 எனும் புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தபோது எதிர் பாராத விதமாக அடுத்தடுத்த ஆட்டங்களைக் கைப்பற்றி நிலை மையை 4-=2 என்று தமக்குச் சாதகமாக ஃபோக்னினி மாற்றி னார். சுதாரித்துக்கொண்ட நடால் மெத்தனப்போக்கைக் கைவிட்டு நிதானத்துடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தார். கடந்த ஆண்டு தம்மை வாட்டிய பதற்ற உணர்வைக் கட்டுக்குள் கொண்டு வர கற்றுக் கொண்டதாக நடால் தெரிவித் தார். இது தமது வெற்றிக்கு வித்திட்டதாகவும் அவர் கூறி னார். மற்றோர் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஜப்பானின் கெய் நி‌ஷிகோரி 7-5, 6-0 எனும் நேர்செட்டில் உக்ரேனின் அலெக்சாண்டர் டோல்கோபோலாவைத் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!