புனே அணியை வீழ்த்திய பெங்களூரு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டு களமிறங்கிய விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியுள்ளது. இப்போட்டியில் பூவா தலை யாவில் வென்ற டோனி, முதலில் பந்து வீச முடிவெடுத்தார். இதன்படி பெங்களூரு அணியின் கோஹ்லியும் ராகுலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். பெரேரா பந்துவீச்சில் ராகுல் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து, கோஹ்லியும் டி வில்லியர்சும் இணைந்து புனே அணியின் பந்துவீச்சை முறியடித்தனர். டி வில்லியர்ஸ் புனே பந்துவீச்சாளர்களைத் திக்குமுக் காட வைத்தார். அதிரடியாக ஆடிய டி வில்லி யர்ஸ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். விராத் கோஹ்லி 47 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த ஜோடியைப் பிரிக்க டோனி எவ்வளவு முயன்றும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியாக, பெரேரா வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் 80 ஓட்டங்கள் எடுத்திருந்த கோஹ்லி ஆட்டமிழந்தார். 83 ஓட்டங்கள் எடுத்திருந்த டி வில்லியர்சும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந் தார். ஆனால் அதற்குள்ளாகவே இருவரும் புனே அணி இனி மீள முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டனர். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது. புனே தரப்பில் பெரேரா 3 விக்கெட்டு களைச் சாய்த்தார். 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புனே அணி பந்தடிக்கத் தொடங்கியது. கடந்த ஆட்டங்களில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த டு பிளஸ்ஸி இந்தப் போட்டியில் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டி னார். அடுத்து களமிறங்கிய பீட்டர் சன், காயம் காரணமாக ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

முக்கிய வீரரான ஸ்மித்தும் 3 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழந் தார். இதனால் புனே அணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. அணித் தலைவர் டோனியும் ரகானேவும் அணியைச் சரிவில் இருந்து மீட்கப் பாடுபட்டனர். இருவரும் நிதானமாக ஆடியதால் அவர்களால் ஓட்ட எண்ணிக் கையை விரைவாக உயர்த்த முடியவில்லை. அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் ரகானே 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டோனியும் சிக்சர் அடிக்க முயன்று 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரேராவும் பாட்டி யாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆட்டம் எந்த அணிக்குச் சாதகமாக முடியும் என்று நிர்ணயிக்க முடியாமல் அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் தவித்தனர். 19வது ஓவரை வீசிய வாட்சன், பெரேராவின் விக்கெட் டை வீழ்த்தியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. 13 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து பெரேரா ஆட்டமிழந்தார். இறுதியில், புனே அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 83 ஓட்டங்கள் குவித்த டி வில்லியர்ஸ் ஆட்டநாய கனாக தேர்வு செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!