லா லீகா: மீண்டும் முதல் நிலையில் பார்சிலோனா

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந் தின் லா லீகா தரவரிசைப் பட்டிய லில் பார்சிலோனா மீண்டும் முதல் நிலையை எட்டியுள்ளது. அதன் நட்சத்திர வீரர் சுவாரெஸ், ரியால் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தக் காற்பந்துப் பருவத்தில் இதுவரை போட்ட 31 கோல்களைக் காட்டிலும் அதிகமாக, 34 கோல்கள் போட்டுள்ளார். நேற்று அதிகாலை பார்சிலோனா நகரில் நடைபெற்ற லா லீகா ஆட்டமொன்றில் ஸ்போர்ட்டிங் கியோனை அந்த அணி 6=0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்று முதல் நிலைக்கு முன் னேறியுள்ளது.

அத்துடன், இந்தப் பருவத்தில் இரண்டாவது முறையாக நான்கு கோல்கள் போட்டு தமது காற்பந்து திறனை நிரூபித்துள்ளார் லுயிஸ் சுவாரெஸ். நேற்றைய ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டு பார்சிலோனா-வுக்கான கோல் வேட்டையைத் தொடங்கி வைத்தார் லயனல் மெஸ்ஸி. அடுத்த கோலை 63ஆம் நிமிடத்தில் போட்டார் சுவாரெஸ். பின்னர் வரிசையாக பார்சிலோனாவிற்கு மூன்று பெனால்டி வாய்ப்புகள் கிடைக்க அவற்றில் இரண்டை சுவாரெசும் ஒன்றை நெய்மாரும் போட்டனர். அத்துடன், ஆட்டத்தின் 88ஆம் நிமிடத்தில் மெஸ்ஸி அனுப்பிய பந்தை கோலாக்கினார் சுவாரெஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!