வேன் ஹால்: எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லை

லண்டன்: நேற்று அதிகாலை எஃப்ஏ கிண்ண அரை­யி­றுதி காற்­பந்­துப் போட்­டி­யில் எவர்ட்­டன் குழுவை 2=1 என்ற கோல் எண்­ணிக்கை­யில் லண்ட­னின் வெம்பிலி மைதா­னத்­தில் வெற்றி கொண்ட மான்­செஸ்டர் யுனை­டெட்­டின் நிர்வாகி வேன் ஹால், "நான் இந்த எஃப்ஏ கிண்ணக் காற்­பந்­துப் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரு­கி­றேன். இதற்­குப் பிந்திய எதிர்­கா­லத்தைப் பற்றி நான் தற்­பொ­ழுது சிந்­திக்­க­வில்லை," என்று கூறி­ய­வர் தாம் எஃப்ஏ கிண்­ணத்தை வென்றா­லும் தொடர்ந்து அடுத்த பருவத் துக்கு நிர்­வா­கி­யாக இருக்க வேண்டுமா என்பதை மான் செஸ்டர் யுனை­டெட்­தான் தீர்­மா­னிக்க வேண்டும் என்று தெரி­வித்­துள்­ளார். நேற்றைய ஆட்­டத்தைத் தொடர்ந்து மேன்யூ 19வது முறையாக எஃப்ஏ கிண்ண இறுதி ஆட்­டத்­தில் பங்­கேற்க உள்ளது. அத்­து­டன், இந்தப் பரு­வத்­தில் விருது ஒன்றைத் தட்டிச் செல்லும் வாய்ப்பை­யும் அது பெற்­றுள்­ளது.

எனினும், எவர்ட்­ட­னுக்கு எதி ரான ஆட்டம் யுனை­டெட்­டுக்கு எளிதாக அமைந்­து­வி­ட­வில்லை. அந்த அணியின் முதல் கோலை மருவான் ஃபெ­லய்னி ஆட்­டத்­தின் 34வது நிமி­டத்­தில் மார்­சி­யல் கொடுத்த பந்தின் மூலம் பெற்றுத் தந்தார். பின்னர், ஆட்­டத்­தின் கடைசி நிமி­டத்­தில் மாற்று ஆட்­டக்­கா­ர­ராக வந்த அண்டெர் ஹரேரா எதிரணி வீரர் ஒருவர் தள்­ளி­விட்ட நிலையில் கீழே விழும்­போது பந்தை லாவ­க­மாக மார்­சி­யல் பக்கம் தள்­ளி­விட அவரும் அமை­தி­யாக குறி­பார்த்து கோல் வலைக்­குள் பந்தைச் செலுத்­தினார்.

எவர்ட்டனுக்கு எதிராக இரண்டாவது கோல் போட்ட மகிழ்ச்சியில் மான்செஸ்டர் யுனைடெட்டின் ஆண்டனி மார்சியல். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!