புனேயைத் தோற்கடித்த கோல்கத்தா

புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் புனே அணியை இரண்டு விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் கோல்கத்தா அணி வென்றுள்ளது. பூவா தலையாவில் வென்ற கோல்கத்தா அணித் தலைவர் காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். தொடக்க வீரர் டூ பிளஸ்ஸி, அல் ஹசன் பந்து வீச்சில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந் தார். இதனை அடுத்து ரகானேவும் சுமித்தும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கள். 31 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஸ்மித் எதிர்பாராத விதமாக 'ரன் அவுட்' ஆனார். இதனை அடுத்து களமிறங்கிய பெரேரா (12), மோர்கல் (16) ஆகியோர் விரைவாக நடையைக் கட்ட, அணித் தலைவர் டோனி களமிறங்கினார்.

சிறப்பாக ஆடிவந்த ரகானே 52 பந்துகளில் 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடி யாக ஆடிய டோனி 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. கோல்கத்தா அணியில் ஷகிப் அல் ஹாசன் 3 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்கள் மட்டும் விட்டு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!