கோல் மழை பொழிந்த லெஸ்டர்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் சுவான்சி குழுவை 4=0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டி புரட்டி எடுத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் லெஸ்டர், 35 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் 76 புள்ளிகளைப் பெற்று லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த லெஸ்டர் சிட்டியின் ஜேமி வார்டி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் களமிறங்க முடியாத சூழல் எழ, லெஸ்டர் கோல் போட முடியாமல் தவிக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கருத்து தவறு என்று லெஸ்டர் நிரூபித்துள்ளது. வார்டி இல்லாமலும் எங்களால் கோல் மழை பொழிய முடியும் என்பதை லெஸ்டர் சிட்டியின் வீரர்கள் காட்டினர்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் இவ்வாண்டின் ஆகச் சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றுள்ள லெஸ்டரின் ரியாட் மாரெஸ் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் பந்தை வலைக்குள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து லெஸ்டர் கோல் வேட்டையில் இறங்கியபோதும் இரண்டாவது கோல் ஆட்டத்தின் 30வது நிமிடத்தில்தான் புகுந்தது. டேனி டிரிங்க்வாட்டர் ஃப்ரீகிக் மூலம் அனுப்பிய பந்தை உயோவா தலையால் முட்டி கோலாக்கினார். இடைவேளையின்போது 2=0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி 15 நிமிடங்களில் லெஸ்டர் சிட்டி ரசிகர்கள் மீண்டும் கொண்டாட்டத்தில் இறங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!