ஸ்பர்ஸ் சறுக்கியதால் வெற்றிப் படிகளில் லெஸ்டர்

லண்டன்: இந்தக் காற்பந்துப் பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் சொந்த அணிக்கு எதிராக கோல் போட்டவர்களின் எண்ணிக்கையில் நான்காவது நபராக சேர்ந்துள்ளார் வெஸ்ட் பிரோம்விச் ஆல்பியன் குழுவின் கிரெய்க் டோசன். ஆனால், நேற்று டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் தமது குழுவுக்கு எதிராக கோல் போட்ட டோசன் பின்னர் அதற்கு பிராயச்சித்தமாக ஸ்பர்ஸ் எதிராகவும் கோல் போட்டு ஆட்டத்தை இறுதியில் 1-1 என சமநிலைப்படுத்தினார்.

இதனால், பிரிமியர் லீக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் லெஸ்டர் குழு வெற்றி பெறுமானால் அதற்கு மேல் அந்தக் குழு எஞ்சியுள்ள ஆட்டங்களின் வெற்றி தோல்வி பற்றிய கவலை இல்லாமலே பிரிமியர் லீக் பட்டத்தை வென்றுவிடும். நேற்றைய ஆட்டத்தின் 33 ஆம் நிமிடத்தில் கிரெய்க் டோசன் தமது அணிக்கு எதிராக கோல் போட்டதும் ஸ்பர்ஸ், லெஸ்டர் குழுக்களிடை யேயான புள்ளிகள் வித்தியாசம் குறைந்து லெஸ்டர் லீக் வெற்றியாளர் விருதுக்காக இறுதிவரை போராட வேண்டி யிருக்குமோ என அனைவரும் நினைத்தனர். ஆனால், இரண் டாம் பாதி ஆட்டத்தில் சக வீரர் கிரெய்க் கார்ட்னர் கொடுத்த பந்தை தலையால் முட்டி ஸ்பர்ஸ் கோல் வலைக்குள் புகுத்தி தமது முந்தைய தவற்றை சரிசெய்தார் டோசன்.

சொந்த அணியான வெஸ்ட் பிரோம்விச் குழுவிற்கு எதிராக கோல் போட்டு சங்கடத்தில் சிக்கிய கிரெய்க் டோசன் (வலம், சிவப்பு சீருடையில்) ஸ்பர்ஸ் அணிக்கு எதிராகவும் கோல் போட்ட மகிழ்ச்சியில் கொண்டாட ஆயத்தமாகிறார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!