சிட்டி- ரியால் கோலின்றி சமநிலை

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி யும் ரியால் மட்ரிட்டும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன. சிட்டியின் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரியாலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. பல கோல்களைப் போட்டி ருக்கும் ரொனால்டோ விளை யாடாத நிலையில், கோல் போட பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றை ரியால் மட்ரிட் கோட்டை விட்டது.

பல ஆண்டுகள் போராட்டத் துக்குப் பிறகு முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற சிட்டிக்குப் பேராதரவு வழங்க அதன் ரசிகர்கள் அலையெனத் திரண்டனர். விளையாட்டரங்கம் எங்கும் சிட்டியின் நீல வண்ணத்தைப் பிரதிபலிக்கும் கொடிகள் கட்டி விடப்பட்டன. இருப்பினும், சிட்டியின் முதல் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டம் அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இருப்பினும், ரியால் மட்ரிட்டை ஒரு கோல்கூட போட விடாதது சிட்டிக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆறுதலாகும். ஆட்டத்தின் கடைசிக் கட்டத் தில் சிட்டியின் ரசிகர்களைப் பதற்றத்தில் வியர்க்க வைத்தது ரியால். தொடர்ந்து பல கோல் முயற்சி களில் இறங்கிய ரியால் நூலிழை யில் அவற்றைத் தவறவிட்டது.

சிட்டி கோல்காப்பாளர் ஜோ ஹார்ட்டின் சாகசங்களே இதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையன்று. சிட்டியின் தற்காப்புச் சுவரை உடைத்த ரியாலால் ஹார்ட்டை முறியடிக்க முடியவில்லை. பந்து நிச்சயம் வலைக்குள் புகுந்துவிடும் என்று பலமுறை எதிர்பார்க்கப்பட்டபோது அதை அருமையாகத் தடுத்து நிறுத்தி னார் ஹார்ட். அப்படியும் ஒருமுறை பந்து ஹார்ட்டைக் கடந்து சென்றது. இம்முறை சிட்டியை கோல் கம்பம் காப்பாற்றியது. ரியாலின் அரங்கில் நடைபெறும் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் வெற்றிக் குழு நிர்ணயிக்கப்படும்.

ரியாலின் தற்காப்பு ஆட்டக்காரர் பெபெ (வலது) வலை நோக்கி அனுப்பும் பந்தைத் தடுத்து நிறுத்திய சிட்டியின் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!