கடைசி நேர கோல்; கலங்கியது லிவர்பூல்

வியாரியால்: ஆட்டம் முடிய ஒருசில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது வியாரியால் குழுவின் அட்ரியன் லோபெஸ் போட்ட கோல் லிவர்பூல் குழுவைத் தோற்கடித்தது. யூரோப்பா கிண்ண அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டம் 1=0 எனும் கோல் கணக்கில் வியாரியாலுக்குச் சாதகமாக முடிந்தது. பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூ லின் ராபெர்ட்டோ ஃபிர்மினோ அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது. இதுவே கோல் போட அக்குழுவுக்குக் கிடைத்த ஆகச் சிறந்த வாய்ப்பு.

எதிரணியின் விளையாட்டரங் கில் சமநிலையாவது கிடைத்திருந் தால் லிவர்பூல் ஆட்டக்காரர்கள் திருப்தியுடன் இருந்திருப்பர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததுபோல கடைசிக் கட்டத்தில் தோல்வியின் பிடியில் சிக்கியது அவர்களுக்குச் சொல் லொணா வேதனையைத் தந்து உள்ளது. இனி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமாயின் சொந்த அரங் கமான ஆன்ஃபீல்டில் வியா ரியாலை முறியடிப்பது மட்டுமல்லாது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையிலும் வெல்ல வேண்டிய நிலை லிவர்பூலுக்கு ஏற்பட்டிருக்கிறது.

"கடைசிக் கட்டத்தில் கோல் விட்டது வேதனைக்குரியது. ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் எதிரணி திடீர் தாக்குதல் நடத் துவதை அனுமதிப்பது ஏற்கத் தக்கதல்ல. ஆனாலும் பரவா யில்லை. இது வெறும் முதல் சுற்று ஆட்டம்தான். இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு அதிர்ஷ் டம் கை கொடுக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!