கோல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை: சொந்த அரங்கில் அபாரமாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் டுகள் வித்தியாசத்தில் கோல் கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்துள்ளது. பூவா தலையாவில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. கோல்கத்தா அணியின் உத்தப்பாவும் காம்பீரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. காம்பீர் அதிகபட்சமாக 59 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந் தார். உத்தப்பா 36 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணியின் சவுத்தி 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதனையடுத்து 175 ஓட்டங் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. பார்த்திவ் பட் டேல் ஓர் ஓட்டத்தில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சீரான வேகத்தில் ஓட்டங்களைக் குவித் தனர். சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 32 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து க்ருணால் பாண்டியா 6 ஓட்டங்களிலும் பட்லர் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் 6வது விக்கெட்டுக்கு பொல்லார்ட் களமிறங்கினார். அப்போது மும்பை அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பொல்லார்ட் தொடக்கம் முதலே கோல்கத்தா வீரர்களின் பந்துகளைப் பதம் பார்த்தார். அவர் அடித்த பந்துகள் எல்லாம் எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்றன. சதீஸ் வீசிய 16வது ஓவரில் பொல்லார்ட் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். அதேபோல் உனாட்கட் வீசிய 18வது ஓவரிலும் 3 சிக்சர்கள் விளாசி மும்பை அணியின் வெற்றியை அவர் உறுதி செய்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!